பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு όλιμνουπιέ = 69 இயல் புள்ளதாகவும் அமைந்திருக்கிறது என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்வது தலையாய கடைமைகளில் தலை சிறந்ததாகும். இடையழகின் கீழே இறங்கி வரும் தசைகள், அமைப்பான அசைவிலேதான் அழகும் வனப்பும் அசை போட்டு நிற்கின்றன. அலைபாய்ந்து நிற் கின்றன. அதற்கான சூழ் நிலையை இயற்கையே இனிதாக அமைத்திருக்கிறது. இயற்கையழகெல்லாம் பெண்களிடத்திலே வந்து குவிந்து, மயங்கிக் கிடக் கின்றன என்று மனிதர்கள் வாயூறிக் கூறி நிற்கும் காரணத்திற் குச் சான்றுகள் இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? இடுப்பு எலும் புக் கூட்டின் அமைப் பிலேதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கின்றது. பெண்ணின் எலும் புகள் ஆணின் எலும் புகளை விட மெலிந்த தாகவும் , கனமில்லாததாகவும் இருந்தாலும், இந்த இடுப்பு எலும் புக் கூட்டின் அமைப் பில், ஆணின் எலும் புக் கூட்டு பகுதி குறைந்தது இரண்டு அங்குலமாகவே இருக்கிறது. அதற்கும் இயற்கையான காரணம் இருக்கத்தான் இருக்கிறது. பெண் வயிற்றுக்குள்ளே உருவாகி வளர்கிற உயிர், பத்து மாதங்களுக்குள் குறைந்தது 7 பவுண்டு * லமுள்ள குழந்தையாக வளர்வதற்கு ஏற்ற இடம் பெண்ணுக் குள் தேவைப்படுகிறதல்லவா ஆகவே அந்த எலும் பு வளையத்தின் பகுதி சற்று அகலமாக இருக்கிறது. இருக்கத்தானே வேண்டும்!