பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா - - BFಗ್ಲಿÏìಗಿ உடல் நலமாக அமையும் என்றாலும் , இடுப்பைச் சுற்றி திரண்டிருக்கும் தசைப் பகுதிகளைக் குறைக்க முடிவதில்லை. இடுப் பில் ஏறி அமர்ந் திருக்கும் வேண்டாதத் தசைகளை இறக் கிக் கழித்து விட வேண்டுமானால், அதற்குரிய பயிற் சிகளைத் தொடர்ந்து, விடாமல் செய்தால தான் சிறப்பான பலன் கிடைக் கும். இத்தகைய அருமையான பயிற்சிகள் தான், உள்ளுறுப் புக்களை இயக் கி உழைக்கச் செய்து, கொழுப்பைக் கரைத்து, உடலின் மேற்புறங்களையும் மெலிந்து விட வைக்கின்றன. இடுப் பைச் சுற்றிலும் , அடி வயிற்றிலும் , பின் புறத்திலும் (Buttock) உள்ள தசைகளை அகற்றுவதற்குமுன், அவைகள் எவ்வாறு வந்து அங்கே படிகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம். ஆண்களுக்கு உடலில் 25 சதவிகிதம் கொழுப்பு உள்ளது என்றும், பெண்களுக்கு 35 சதவிகிதம் உள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். பெண்களின் உடல் முழுவதும் கொழுப் புச் திசுக்கள் பரவியிருக்கின்றன என்றும் , அவைகள் சில சமயங்களில் ஒரே இடங்களில் வந்து குழுமிவிடுகின்றன என்றும், அதுவும் குறிப்பாக, இடையைச் சுற்றித்தான் அதிகமாகக் கூடிவிடுகின்றன என்றும் , கூறுவது உண்மை தான். இடையின் மேல் பாகத்தைச் சுற்றிப் பெண்கள் உடுத்திக் கொண்டிருக்கின்ற ஆடைகளின் கனமே காரணம் என்றும் அவைகளே மற்ற இடத்துக்