பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 7 உங்களுககு நனமை பயபபனவாகும. உங்களுக்கு சுவையான உணவாகவே இருக்கலாம். இவை இல் லாவிடில் எனக் குச் சாப் பி டப் பிடிக்காது, சாப்பாடே இறங்காது என்றும் கூறலாம். இருந்தாலும் உடல் கனத்தையும் தரத்தையும் நீங்கள் குறைக்க, நீங்கள் இதைக் கடைப் பிடித் தே தீர வேண்டும். உருளைக் கிழங்கு, கேக் வகைகள், வெண்ணெய், ஜாம், இனிப்பு வகைகள், சர்க்கரை, பிஸ் கெட்டுகள், சாக் லெட் வகை போன்றவற்றைத் தவிர்ப்பதுடன், எண்ணெய் அதிகமுள்ள வறுவல் , பொரியல் போன்றவற்றையும், தயிர், நெய் முதலானவற்றையும் நிச்சயம் ஒதுக்கியே வைக்க வேண்டும். உணவில் கார்போ ஹை டிரேட் டுக்கள் (மாவுச் சத்துள்ள பண்டங்கள்) அடங்கியுள்ள உணவு வகைகளைத் தவிர்த்து, புரத சத்துள்ளவற்றையும் பழவகைகளையும் சேர்க்கலாம். ஆனால் அவைகளும் அள்வோடு இருக்க வேண்டும். எனவே நாவடக்கம் வேண்டும் என்பதை நினைவில் வைத் திருந்து அவற்றைக் கட்டுப்படுத்தி, பயிற்சியை செம்மைப் படுத்துங்கள். அத்துடன், பயிற்சி செய்தவுடன், உடலில் பயிற்சி பெற்ற உறுப்புக்களைப் பிடித்துவிட்டால் (Massage) தசைகள் கரைந்து விட வசதியாக இருக்கும். ஆகவே, தசைப் பகுதிகளைப் பிடித்து விடும் போது கைவிரல்களும் நன்கு வலிவு பெறுகின்றன. எனவே, இம் முறையையும் நீங்கள் பின்பற்றுங்கள்.