பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா கல்லிலே GETরক্ট নেদায়োজ விரலிலிருந்து இரத்தம் கொஞ்சம் அதிகமாக வந்துவிட்டால், மயக்கம் போட்டு விழுகின்றவர்களைக் காண்கிறோம். ஆனால் மாதவிடாய் என்ற முறையின் காரணமாக இயற்கையான இரத்தப் போக்கு 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து வந்தும், அவர்கள் இயல் பாகவே சக்தியோடு இருப்பதைக் காணுந்தோறும் , என்ன நினைக் கத் தோன்றுகிறது? அவர்கள் உடலிலே ஏதோ இரகசிய சக்தி ஒன்று இருந்து அவர்களுக்கு அந்த ஆற்றலை அளிக்கிறது என்றுதானே பொருள். வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்குங்கால், ஆணோ அதிகமாக உணர்ச்சி வசப் படுகிறான். ஆத்திரமடைகிறான். அநாவசியமாகத் தன்னைக் குழப்பிக் கொள்வதுடன், கூட இருப்பவர்களையும் குழப்புகிறான். ஆனால் பெண்ணோ நிதானமாக யோசித்துப் பதட்டப் படாமல் அந்த காரியத்திற் குப் பரிகாரம் காணுகிறாள். குடும்பம் கவிழ்ந்து விடுமோ என்ற இறுதிக் கட்டத்திலும் கூட பெண்ணானவள் பொறுப்பேற்று வெற்றி பெறுகிறாள் என்றால், அது மனத் திண்மையைத்தான் காட்டுகிறது. மென்மையான மயிற் பீலிகள் அதிகமாக ஏற்றப்பட்டாலும், வண்டிக்கு அதிக பாரம் கிடைக்கும் என்பதுபோல, மென்மையான அங்கங்களும் மென மையான தோற்றமும் அதிக வன்மையைத் தந்திருப்பது இயற்கைத் தந்த வரப்பிரசாதமே. மனோ வியாதியால் அவதிப் படுகிற வர் மட்டுமல்ல; மனநோய் முற் றிப் பைத் தியம்