பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா படையும் நடுங்கும் என்கிறார்கள். அந்தப் பாம்பையும் எவ்வாறு ஆட்டிப் படைக்கிறான் பாம்பாட்டி! கடலைக் கண்டால் குலை நடுங்கும் என்கிறோம். கடலில் மூழ்கி முத்தெடுக்கிறார்களே! அவர்களும் மனிதர்கள் தானே! முதலில் நம்பிக்கை ஏற்பட்டால்தான், செயலிலே துணிவு ஏற்படும். துணிவு வந்துவிட்டால் , திறமை தானாகவே முகிழ்க்கத் தொடங்கிவிடும். திறமை வந்து விட்டால், பெருமை பின்னாலே வந்து விடாதா! மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மஞ்சமாக விளங்கும் நமது உடலை, மாணிக்கமாக எண்ணியல் லவா பாதுகாத்திட வேண்டும். நமது உடலானது வாராது வந்த மாமணியல்லவா! வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்சினைகள் வரும். இருக்கும். போகும். திரும் பி வந்து தாக்கும் என்றாலும், பிரச்சினைகளை சமாளித்தால் தானே பூரண நிம்மதியைப் பெற முடியும். சமாளிக்கின்ற சக்தியுைம் சாகசத்தையும் அளிக்க வல்லது கட்டான உடல் தானே! பேரழகைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் புறப் பட்டு, ஆசையுடன் பெற்றுக் கொண்ட இந்நூலின் கருத்துக் களில், உங்களுக்கு உடன்பாடு ஏற் பட்டுவிட்ட தென்றால் , இன்றே நல்லதொரு பணியான உடற் பயிற்சியை செய்திடத் தீர்மானியுங்கள். திட்டமிடுங்கள். திறம்பட செயல்படுங்கள். நல்ல செயலுக்கு நாள் பார்க்க வேண்டாம் என் பார்கள். நன்றே செய்க அதை இன்றே செய்க என்பதும் நன்மொழி அல்லவா!