பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 97 எனவே, எல்லாவற்றிற் கும் அடிப் படையாக அமைந்திருக்கும் பெறற் கரிய உங்கள் உடலை பேணுங்கள். பெருமை மிகுந்த உங்கள் உடலில் பேரழகைக் காணுங்கள். பேரின்பத்துடன் இந்த உலக வாழ்க்கையை அனுபவியுங்கள். இந்தப் பிற வில் இன் பத் தைவிட, இன்பமான வாழ்க்கையைவிட, வேறென்ன வேண்டும் நமக்கு! 7. சமுதாயமும் பெண்களும் பெண்களை குடும்பத்தின் விளக்கு என்று போற்றிப் புகழ் கின்றார்கள். குடும் பத் தைக் காப்பதால் தான் இல்லாள் என்று பெருமையுடன் பாராட்டப் படுகின்றார்கள். இல் லத்தை ஆள்கின்ற பெண், குடும் பத்தில் உள்ளவர்களின் உள்ளத்தையும் ஆண்டால் தான் உண்மையான பெருமையைப் பெற முடியும். எப்பொழுது பார்த்தாலும் சுகமில்லை என்ற புலம்பல், மருந்து சாப்பிடவேண்டும் என்று புராணம். மனம் சரியில்லை என்ற ஒலத்துடன் ஒரு குடும் பத் தலைவி இருந்தால், அந்த வீடு நரக வேதனையைத் தான் அளிக்குமே தவிர, சொர்க்கமாகக் காட்சியளிக்காது. நல்லதொரு குடும் பம் பல்கலைக்கழகம் என் பார்கள். நல்ல பல்கலைக்கழகமாக குடும் பம் விளங்க, நாயகியாக இருக்கும் பெண்ணே பெரும் பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறாள். உடல் நலம் இல்லாத பெண், எப்படி இந்த பெரும் பொறுப்பினை