பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 நோக்கம், அநாவசியமான குற்றச் சாட்டுக்கு ஆளாகியிருப்பது என்கிற ஓர் சூழ்நிலையை வைத்து எழுதப்படிகின்ற வரலாற்றுக் குறிப்புகளாகும். எந்த நாடு ? எந்த நாட்டில் சீட்டாட்டம் தோன்றியது என்ற குறிப்பினைத் தேட ஆரம்பித்த உடன், எல்லா நாடுகளும், எங்கள் நாடுதான் தோன்றிய இடம் என்று நம்மை துரத்திக் கொண்டு வருகின்றன. அதனால், ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு கருத்தாக தொடர வைத்து நாம் நமது குழப்பத்தைக் குறைத்து கொள்ளலாம்.