பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. நாடுகளும் பாடுகளும்


எங்கே தோன்றியிருக்கலாம் இந்த சீட்டாட்டம் என்று எண்ணியவுடனே, இன்று முன்னணியில் இருக்கும் சில நாடுகள் முண்டியடித்துக் கொண்டு முன்னேவந்து, மார்தட்டி நிற்கின்றன. தாயகம் எங்கள் நாடுதான்’ என்று தோள் உயர்த்தி நிற்பதிலே, தலையாய நாடு என்று சீனாவைச் சொல்லலாம்.

சீனமே முன்னோடி : சீட்டாட்டக்கலை சீனத்தில்தான் முதன் முதலில் தோன்றியது என்று ஒரு வரலாற்றாசிரியர் தன் விளக்கத்தைத் தொடங்குகிறார். சீட்டாட்டம் சீனத்திலே உலவியகாலம் கி. பி. 1120ம் ஆண்டு என்று குறிப்பிடுகின்றார். அவர் கூறுகின்ற காரணமாவது, சீனத்தார் தங்களது படைவீரர்களுக்கு படை நடத்தும் யுக்திகளை விளக்குவதற்காக சீட்டாடும் முறையைப் பயன்படுத்தினார்கள் என்று கூறியதுடன், இந்தப் பழக்கம் சீனரிடமிருந்து (Moors) இனத்து மக்களிடம் கைமாறியது என்றும் கூறுகின்றார். மூர் இனத்தவர் ஸ்பெயின் நாட்டின் மீது