பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 O 0 படையெடுத்த பொழுது, இதனை ஐரோப்பிய மக்களுக்குக் கற்றுத்தந்து அறிமுகப்படுத்தினார்கள் என்று பிரமாதப்படுத்துகிறார் பெயர் விவரம் தெரியாத அந்த வரலாற்றாசிரியர். மூர் இனத்தவர் முன்னே நிற்கிறார்கள் : அப்படி யென்றால், மூர் இனத்தவர் ஸ்பெயின் நாட்டின் மீது படையெடுத்த காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு என்று வரலாறு கூறுகிறது. சீன நாட்டினர் இதனைக் கையாளத் தொடங்கியது. கி.பி. 1120ல் என்றால், இவர்கள் அதற்கும் நானுறு ஆண்டு களுக்கு முன்பே சீட்டாட்டம் ஆடியிருக்கிறார்கள் என்றல்லவா அர்த்தம் ஆகிறது. சீன நாட்டில் சீட்டாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னமேயே மூர் இனத்தவரிடையே விளங்கிவந்திருக்கிறது என்ப தால் மூர் இனத்தவரே முன்னே நிற்கின்றார்கள். அவர்கள்தான் ஐரோப்பிய மக்களுக்கு அறிவுறுத்தி, இந்த ஆட்டத்தை அறிமுகப்படுத்தினர் என்று கூறுகின்ற இன்னொரு வரலாற்றாசிரியரின் குறிப்பு எதிர்வாதமாக அல்லவா விளங்குகிறது! பிரான்சுக்குப் பெருமை பிரெஞ்சுத் தேசத்தை கி. பி. 1892ம் ஆண்டு ஆறாம் சார்லஸ் என்னும் அரசர் ஆண்டு வந்தார். நாட்டு மக்களிடையே நல்ல மதிப்பையும் பேரும் புகழையும் பெற்று திகழ்ந்த அந்த மாமன்னர், விதி வசத்தாலோ என்னவோ மனோவியாதியால் மூளைக்கோளாறு ஏற்பட்டு, மன நோயுடன்