பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

வாழலானார். பைத்தியக்கார மன்னன் என்ற பெயருடன் அவர் வாழ வேண்டிய சூழ்நிலையில், இந்த சீட்டாட்டம் அவருக்காக உருவாக்கப்பட்டதாகவும், ஆறாம் சார்லசுக்காக சீட்டாட்டம் தோன்றியது என்ற பெருமையை அவர் பெற்றதாகவும் ஒரு வரலாற்றாசிரியர் கூறுவதால், பிரான்சும் இந்தப் பெருமையைப் பெறுகிறது.

திபேத் தெளிவுபடுத்துகிறது

எகிப்து நாட்டில் சீட்டாட்டம் இருந்தது. பாரசீக நாடு முழுவதும் இந்த ஆட்டம் பரவி இருந்தது; இந்தியாவிலும் சீட்டுக்களைப் பயன்படுத்தி ஆடி வந்தனர் என்ற சேதிகள் சற்று சிலிர்ப்பூட்டுவனவாக இருந்தாலும், தெளிவான வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லையே என்ற ஏக்கம் உடனே தொடர்வதையும் நம்மால் தடுக்க முடியவில்லை.

சீட்டாட்டம் ஆடினார்கள் என்றுதான் கூறுகின்றார்களே தவிர, சீட்டுக்கள் எப்படி இருந்தன. எந்த மாதிரியாக விதிமுறைகளை வைத்துக் கொண்டு ஆடினார்கள் என்கிற குறிப்புக்கள் தெளிவாக இல்லை. இது ஒரு செவி வழிச் செய்தி என்பதால், ஆதாரமில்லாத குறிப்பு என்கிற வகையில் அடிப்பட்டுப் போகிறது என்று கூறுவாரும் உண்டு.

ஆனால், திபேத் நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சீட்டுக்களை (cards) ஆடினர் என்கிற ஒரு