பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

(Cup); நான்காவது கையில் தண்டம் (wand); பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிரான்சிலும் இத்தாலியிலும் பயன்படுத்தப்பட்ட சீட்டுக்களில், மேலே கூறிய சின்னங்கள் இருந்ததால், இந்துக்கள் தான் சீட்டாட்டத்தை முதலில் ஆடியிருக்க வேண்டும் என்ற அபிப்ராயத்தைத் தங்கள் ஆராய்ச்சிக் குறிப்பாக வெளியிட்டிருக்க வேண்டும். அதாவது, இந்த மாதிரியான சீட்டுக்களை (cards) தயாரித்த ஒருவர் (அவர் ஒரு இத்தாலி நாட்டவராகவோ அல்லது இத்தாலி பிரஞ்சுக்காராகவோ கூட இருக்கலாம்) அர்த்தநாரி தெய்வத்தின் கரங்களில் காட்டபட்டிருந்த குறியீடுகளைப் பயன்படுத்திக்கொண்டு, தயாரித்து இருக்கலாம் என்பதால், இந்தியாவில் உள்ள இந்துக்கள் தான் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே சீட்டாட்டத்தை ஆடி வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இத்தாலியாகவும் இருக்கலாம்

இன்னொரு வரலாற்றாசிரியர் கூறுகின்றார். இத்தாலியைப் பற்றி, கி. பி. 13ம் நூற்றாண்டில் இத்தாலியர்தான் சீட்டுகள் இந்த ஆட்டத்தில் படன்படுத்தப்பட்டன என்றும் அந்த வரலாற்றாசிரியர் கூறுகின்றார். இத்தாலியில் ஆரம்ப காலத்தில் 1 செட்டுக்கு 25 சீட்டுக்கள் இருந்தன என்றும், ஆனால் சீட்டுக்களில் எந்தவிதமான படமோ சின்னமோ இல்லாமல் வெறுமனே விளங்கின என்கிற கருத்தையும் அவர் தெளிவாகக் கூறிச் செல்கிறார்.