பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 இற்காலத்தில் கூறப்படும் கொள்கையின்படி, சீட்டாட் டத்தில் பயன்படும் சீட்டுக்கள் ஏதாவது படங்களையோ அல்லது சின்னங்களையோ பொறிக்கப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்தக் கால சீட்டுக்களில் படங்களே இல்லை என்பதால், அவை மக்களுக்கு முன்னறிவித்துக் காட்டும் அதிர்ஷ்டம் பற்றிக் கூறுகின்ற ஜோசிய சீட்டுக் கட்டுகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவை உண்மையில் சீட்டுக்கட்டுகள் அல்ல என்று பலர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர். மறுப்புகளி லிருந்து ஒரு மாற்றமான உண்மை நிலை ஒன்று பிரெ ஞ்சு தேசத்திலிருந்து நமக்குக் கிடைக்கிறது.