பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ஆகிய நான்கு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன என்றும் சான்று பகர்கிறார்.

இந்த இருநாடுகள் பற்றிய கருத்துக் குழப்பத்தைத் தீர்க்கமுனையும் மற்றொரு வரலாற்றாசிரியர், அதற்கு ஒரு புதிய வடிவம் தரவும் முயற்சி செய்திருக்கிறார். அதாவது, சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ஆடுகின்ற ஆட்டமானது, ஏறத்தாழ 13வது அல்லது 14ம் நூற்றாண்டுகளில், இத்தாலியில் அல்லது பிரான்சு தேசத்தில், ஏதாவது ஒருநாட்டில் தான் உண்டாகியிருக்க வேண்டும் என்று நடுத் தரமாகப் பேசி சமாதானம் அடைந்து கொள்கின்றாரே தவிர, அவரால் உறுதியாகக் கூற முடியவில்லை.

படம் காட்டும் சீட்டுகள்

எந்தநாடு எந்த ஆண்டு என்று எந்தவரலாற்று ஆசிரியர்களாலும் சீட்டாட்டத்தின் தோற்றத்தை உறுதியாகக் கூற இயலாத கருத்துக்களைத்தான் நாம் இதுவரை அறிந்து கொண்டோம். ஆனால், சீட்டுக்களில் படம்வந்த பிறகு தான், அவை சிறப்பும் செழுமையும் பெற்றன என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டு, அவை வந்த விதம் பற்றி சிறிது விளக்கமாகவே காண்போம்.

சீட்டுக் கட்டுகளில் உள்ள சீட்டுகளை நாம் பார்த்தால், அவை நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள். டைமன், ஸ்பேட், ஹார்ட்,