பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அன்னை என்பது நாம் அறியாததா? அதனால் தான், இயற்கை அன்னையே நான்கு வகைப் பிரிவுக்கும் வழிகாட்டி என்ற கருத்தை ஒருவர் மிகவும் நாசூக்காக விளக்கி இருப்பதைப் பாருங்கள்.

இயற்கையான காலப்பிரிவுகள் நமக்குத் தெரியும். வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், மழைக்காலம் இந்த நான்கு பிரிவுகளையும் உள்ளடக்கி வைத்திருப்பது 12மாதங்கள். இந்த பனிரெண்டு மாதங்களுக்கும் உள் பிரிவுகளாக இருப்பவை 52 வாரங்கள் இப்படி பிரிந்து இருப்பதை சீட்டாட்டத்தில் சேர்த்துக் காட்டும் சிறப்பைப் பாருங்கள்.

இயற்கைப் பிரிவு சீட்டுப் பிரிவு
1. வசந்தகாலம் — ஹார்ட் (Heart
2. கோடைகாலம் — கிளப் (Club)
3. இலையுதிர்காலம் — டைமண்ட்(Diamond)
4. மழைக்காலம் — ஸ்பேட் (Spade)

ஒரு வருடகாலத்தில் இந்த நான்கு காலங்களும் மாறிமாறி உலகில் இடம் பெறுகின்றன. அதாவது 52 வாரங்களில் இப்படி மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால்தான் ஒரு சீட்டுக்கட்டிலே 52 சீட்டுக்கள் இடம் பெற்றுள்ளன.