பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


109 ஒவ்வொரு சீட்டுக்கட்டிலும் நீங்கள் பார்த்தால், மொத்தம் 12 படங்கள் உள்ள சீட்டுக்கள் இருக்கும் அதாவது ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ராஜா (King) ஒரு ராணி (Queen) ஒரு இளவரசன் (Jack). ஆக நான்கு பிரிவுக்கும் சேர்த்து 12 படங்கள் உண்டு. இந்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதத்தைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன. 13வது படம் ஒன்று இருக்கிறதே என்றால், அது சூரியனைக் குறிக்கும் என்பதாக ஒரு வானவி யலறிஞர் கூறுகின்றார். ஆக, சீட்டுக்கட்டின் முக்கிய வடிவம் இயற்கையைப் பார்த்துத்தான் பிரித்துப் பொருத்தியிருப்பதாகத் தோன்றுகின்ற தல்லவா? வாழ்க்கையே வழிகாட்டி இயற்கையின் பிரதிபலிப்பு செயற்கையல்லவா! இறைவன் செய்தது இயற்கை. மனிதன் செய்வது செயற்கை. மனிதன் வாழ்க்கைக்கும் மகிமை யளிப்பது போல, ஒரு கருத்தைத் கூறவேண்டும் என்று ஒரு மகானுபாவன் முயன்றிருக்கிறார். ஆகவே, அவர் இப்படித்தான் இந்தப்பிரிவும் தோன்றியிருக்க வேண்டும் என்று புதுமை செய்து பார்க்கிறார். வாழ்க்கை என்பது அன்பு, அறிவு, செல்வம், உழைப்பு அல்லது இறப்பு என்பனவற்றின் தொகுப்