பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4. படங்களும் பெயர்களும் சீட்டுக்கட்டில் நான்கு வகைகள் உண்டு என்றும் அத்தகைய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 3 படங்கள் உண்டு என்றும், அவற்றிற்கு ராஜா, ராணி,ஜேக் என்று பெயர் உண்டு என்றும் நீங்கள் அறிவீர்கள். அலங்கார பூஷணமாக விளங்கும் அந்தப் படங் களைப் பார்க்கின்றவர்கள், அவற்றை பொம்மை ராஜா, மக்கு ராஜா என்று கூறுவார்கள். எதற்கும் லாயக்கற்ற ஒருவரை சுட்டிக் காட்டி இழிவாகப் பேச, சீட்டுக்கட்டு ராஜா என்றும் பேசுவார்கள். அப்படியென்றால், சீட்டுக்கட்டில் உள்ள அந்தப் படங்கள் எல்லாம் கற்பனையாக உருவானவையா? என்றால் அப்படி அல்ல. அத்தனைப் படங்களும், அகிலத்திலே சிறந்த, புகழ்பெற்று விளங்கிய வீரர்கள், ராணிகள், அரசர்கள், ஆவார்கள். அத்தகைய மாவீரர்கள், மாசற்ற தியாகிகள், மண்டலம்போற்றிய விவேகிகள் யாராக இருக்கக் கூடும்?