பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

மிகவும் இழிவாக சீட்டுக் கட்டில் அவர்கள் படம் ஏன் இடம் பெற்றிருக்க வேண்டும்? அவர்களைமகிழ்விக்கவா? இல்லை. பிறகு? அவர்கள்தான் அமரர்கள் ஆகிவிட்டார்களே? அவர்கள் புகழ்பாடுவதால் என்ன பயன் வந்து விடப்போகிறது? ஒரு உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும்.

புகழ்வாய்ந்த மனிதர்களின் படங்களைப் போட்டால், சீட்டுக்கட்டில் அடிக்கடி அவர்களை ஆடுவோர் பார்க்கும்போது, அவர்களைப் போல நாமும் உயரவேண்டும், உலகப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ண எழுச்சி ஏற்பட்டு, உற்சாகமாக உழைக்கவும், உன்னதமான யுக்திகளை மேற்கொள்ளவும் முயற்சிக்கக்கூடும் என்ற நன்னோக்கில்கூட அமைத்திருக்கலாம்!

எப்படி இருந்தாலும், சீட்டில் உள்ள படங்கள் அத்தனையும் சீரும்சிறப்பும், செழுமையும் பெற்று வாழ்ந்த பெரிய மனிதர்கள் ஆவார்கள்.

சீட்டுக்கட்டுக்கள் தோன்றிய ஆரம்ப நாட்களில், ஒவ்வொரு படமும் கையினாலேயே வரைந்து வண்ணம் தீட்டப்பட்டன. அப்படி பலரும் பலவிதமாக வரையவே, உருவ அமைப்பும், முக அமைப்பும், உடை தோற்றத்திலும் பலவாறு வேற்றுமைகளும் வித்தியாசங்களும் நிறைய தோன்றின. இந்த நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்து வந்தது.