பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 14 அதற்குப்பிறகு அச்சுக்கலை அதிக அளவில் மக்கள் மத்தியிலே இடம் பிடித்துக் கொண்ட தன் காரணமாக, இந்தப் படங்கள் ஒரே மாதிரியாக, ஒரே வண்ண அமைப்புடன் சீர்படுத்தப்பட்டன. இப்பொழுது ஒவ்வொரு பிரிவிலும் உள்ள ராஜா ராணி தளபதியாகத் தோன்றும் ஜேக் ஆகிய படங் களையும் அதற்கான பெயர்களையும் பார்ப்போம். 1. ஸ்பேட் சீட்டில் உள்ள ராஜா, ராணி, ஜேக். ஸ்பேட் ராஜா : முதன் முதலாக ஸ்பேட் ராஜாவாக அலங்காரிக்கப்பட்டவர், பைபிள் நூலில் புகழ் பெற்ற அரசராக விளங்கும் தாவிது J5395 (King David). இவரது படம் முதன்முதலாக வரையப் பட்டபொழுது, கையிலே இசைக்கருவி ஒன்றை வைத்திருப்பது போல வரையப்பட்டது. ஆனால், காலம் மாற மாற இந்தப் படம் இன்னும் எழில் உருவமாகவும் வளர்ச்சி பெற வும் அமைக்கப்பட்டது. சிறிது காலம் கழித்து இதில் ஒரு மாற்றம். பிரெஞ்சு தேசத்தை ஆண்டு உலகப் புகழ் பெற்று, பெரும் சக்ரவர்த்தி என்ற புகழடைந்த நெப்போலியன் படம் ஸ்பேட் ராஜாவாக வடிவம் பெற்றது. மீண்டும் இதில் ஒரு மாற்றம். அரசியல் போல வெலிங்டன் பிரபு என்பவரின்