பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 15 படம் ராஜாவாக இடம் பெற்றுக்கொண்டது. என்ருலும், இறுதி வெற்றி தாவிது ராஜாவுக் குத்தான். இப்பொழுது ஸ்பேட் ராஜாவாக இருப்பது தாவிது ராஜா. ஸ்பேட் ராணி : முதன் முதல் ஸ்பேட் ராணி யாகும் பெருமை பெற்ற படம் பலாஸ் அதினா. இந்த பெண்மணி ஒரு தேவதை. ஆமாம். கிரேக்கநாட்டில் இருந்த ஆராதனைக்குரிய ஒரு தேவதையின் படத்தை வரைந்திருந்தார்கள். ஆனால், சிறப்பாற்றல் மிக்க தாவிது அரச னுக்கு பொருத்தமான படமாக இந்தப் படம் எப்படி அமையும் என்று எழுந்த எதிர்ப்பின் காரணமாக அதினாதேவதை படம் அகற்றப் பட்டது. எதிர்ப்பிற்குப் பிறகு, பலர் ஏற்றுக்கொண்ட படம் பாத் ஷிபா என்பாரின் படம். அதுவும் அழகுற அமையவில்லை என்ற காரணம் காட்டி, எடுத்துவிட்டனர். மூன்றாவதாக, பிரெஞ்சு தேசத்து வீராங்கனை எனப் புகழ் பெற்ற ஜோன் ஆப் ஆர்க் என்பாளின் படமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஸ்காண்டி நேவிய நாட்டினர் வணங்கிய பெண் கடவுள் டியா டானிக் எனும் கடவுளின் படம் இடம் பெற்றிருந்தது.