பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

ஸ்பேட் ஜேக் : ஆங்கில இலக்கியத்தில், ஆர்தர் மன்னன் என்பவர் புகழ்பெற்ற புராணக்கதை நாயகன் ஆவார். அவரது தங்கையின் கணவன், அவர் பெயர் ஏகியர் அல்லது கோல்கர் அல்லது ஹோகியர் என்று பலவாறாக அழைக்கப்பட்டது. அந்த வீரர், புராணங்களில் வருகின்ற பயங்கர பறவை நாகங்களைக் (Dragon) கொன்று வீரதீர சாகசம் செய்த, மகாபுராண வீரன் இந்த வீரனுடைய படம் தான் ஸ்பேட் ஜாக்காக இடம் பெற்றிருக்கிறது.

2. ஹார்ட் சீட்டின் ராஜா, ராணி, ஜேக். ஹார்ட் ராஜா : ஆரம்ப நாட்களில் சார்லி மேகன், எனும் மன்னனின் படம்தான் இடம் பெற்று வந்தது. ஆனால், அதையும் மாற்றி மகா கான்ஸ்டன் டைன் எனும் மாமன்னனின் படம் வந்து இடம் பிடித்துக் கொண்டது.

காலத்தின் கோலம். அந்த நேரத்தில் பிரிட்டனை ஆண்ட முதலாம் சார்லஸ் எனும் மன்னனை மகிமைப்படுத்த, அவரது படம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுவும் மாறியது. பிரெஞ்சு தேசத்தின் புகழ்மிக்க நாவலாசிரியரான விக்தர் கியூகோ என்பாரின் படம்கூட சிலகாலம் ராஜாவாக விளங்கியது. ஆனால், எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு, அங்கீகரிக்கப்பட்டப் படமாக சார்லிமேகன் படமே தற்பொழுது இருந்து வருகிறது.