பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

ஹார்ட் ராணி : கிரேக்க நாட்டுக் கீர்த்திமிக்க புராணத்தின் அழியாப் புகழ் நாயகிகளாக விளங்கும் டிராய் நாட்டு அழகி ஹெலன் என்பவரின் படம் முதன் முதலாக இடம் பெற்றது. ஆனால் இதற்கு நிறைய போட்டிகளும் எதிர்ப்புக்களும் கிளம்பின. அதனால் அவ்வப்போது ஒவ்வொரு பெண்ணின் படம் இடம்பெறத் தொடங்கியது.

மகாகான்ஸ்டன்டைன் எனும் மன்னனின் தாயார் செயின்ட் ஹெலனா என்பவரின் படம் அடுத்து போடப்பட்டது.

பின்னர், மாறி வந்தவர்களின் பட்டியலைப் பாருங்கள் டிடோ— பின்னர் ஜூனோ சில சமயம் பிரிட்டனைச் சேர்ந்த எலிசபத் அரசி; பின்னர் ராக்சேன். பின்னர் பைபிள் புகழ் ராக்கேல் கடைசியாக, பாஸ்டா என்றாலும் இறுதியாக பைபிளில் வரும் ஜூடியத் என் பாளின் படம் இடம் பெற்றுக் கொண்டது.

ஹார்ட் ஜேக் : பிரெஞ்சு தேசத்தை ஆண்ட ஏழாம் சார்லஸ் மன்னனின் கீழ் பணிபுரிந்த பெருமை பெற்ற தளபதி ஒருவர். அந்த வீரன் ராபின்குட் என்பவரைப் போல, காடுகளுக்குச் சென்று வீரதீர சாகசம் புரிந்தவன். அவன் பெயர் எடினி டி விக்னோலாஸ். அவ்வீரனின் படமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.