பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

துறையிலும் போட்டியிட்டு இழிவு படுத்துவதே தொழிலாகப் போய் விடுகிறது.”

இந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே மேற்கண்டவாறு முணுமுணுப்பவர்களே அதிகம். இந்த 'அதிகப்' பட்டியலில் ஆண்கள் மட்டும்தான் இருப்பார்களா என்றால்...பெண்களும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

பெண்கள் விளையாட்டுக்கு ஆதரவு என்பதை விட எதிர்ப்புகளே அதிகம். இது இன்று நேற்றல்ல.. ஆண்டாண்டு காலமாகவே தொடங்கி தொடர்ந்து வருகின்றது.

ஆதிகால வரலாற்றில் தாய்க்குலமே தலைமை தாங்கி வேட்டைக்குச் செல்ல முன் சென்று, ஆண் களை வழி நடத்தி வந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்தடுத்து வந்த வரலாற்றுக் குறிப்புக்கள், ஆண்களுக்கு அடங்கிப் போகின்ற, அடங்கி வாழ்கின்ற அளவில் ஒடுங்கிப் போனதையே சுட்டிக் காட்டிச் செல்கின்றன.

வீட்டுக்குள்ளே வாழ்கின்ற வாழ்க்கையை, ஒரு வட்டத்திற்குள்ளே சுற்றி வருகின்ற வாழ்க்கையை ஒரு ரங்கராட்டினமாக சுற்றி வருகின்ற வாழ்க்கையை எல்லா நாடுகளிலும் வாழ்கின்ற பெண் மணிகள் ஏற்றுக் கொண்டார்கள்.

பொதுவாக விளையாட்டுக்கள் என்றால் அவை ஆண்களுக்குத் தான் உரியது. பெண்கள்