பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 1 9 கிளப் ராணி : முதலில் புகழில்லாத ஒரு பெண்மணி அவள் பெயர் லூக்ரிஷியா. ஆகவே எளிதாக மாற்றப்பட்டாள் பிறகு அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டவளின் பெயர் ஹெக்குபா என்பதாகும். ஆனாலும் சீட்டுக்கட்டுகளைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் கள் தாங்களாகவே ஒரு கற்பனை அழகியை உருவாக்கி வைத்தார்கள். இறுதியாக கிளப் ராணியாகத் திகழும் பெருமை பெற்றுக் கொண்டவள் அர்ஜைன் என்பவளாகும். கிளப் ஜேக் : பிரிட்டனில் புகழ்பெற்ற புராண காவியத்தின் ஈடினையற்ற வீரனாகத்திகழ்ந்த சர்லான்சிலாட் என்பவனே இப் படத்தினை அலங்கரிக்கின்றான். இப்படியாக பெருமைக் குரிய பைபிளில், வரும் மக்கள் புராண காவிய நாயகர்கள் புவியாண்ட மன்னர்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பொறாமையை உண்டாக்கும் அழகு நாயகிகள் அனைவரும் இடம்பிடித்துக் கொண்ட சீட்டுக்கட்டில் உள்ள படங்கள் யாவும் சிந்தனைக்குரியவர்களே! அவர்கள் வடிவங்களைப் பார்க்கும் பொழுது, வரலாற்றுப் புகழும் கூடவே நம்மை வட்டமிட்டு அழைக்கின்றன. அப்படிப்பட்ட சீட்டாட்டம், எப்படி வளர்ந்து உயர்ந்தது என்பதை காண்போம்.