பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 இரவு பகல் தெரியாது, பசி தாகம் அறியாது. உலகத் தொடர்பே இல்லாது, உட்கார்ந்த இடத் திலே அசையும் சமாதி போல அமர்ந்து ஆடுகின்ற பயங்கர சீட்டாட்டக்காரர்களை நாம் பார்த்திருக் கிறோம். கட்டி ஆடப் பணம் போதவில்லை யென்று, கட்டிய மனைவியையே பந்தயப் பொரு ளாகக் கட்டித் தோற்றுப் போன கலிகால தருமன் களையும் நாம் பத்திரிகைகள் மூலமாகப் படித்து அறிந்திருக்கிறோம். சீட்டாட்டம் சூதாட்டம் என்ற கீழ்நிலைக்கு ஆனதால்தான், பலநாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. கண்மூடித்தனமாக அடக்கப்பட்டது. அதன் காரணமாக, சீட்டாட்டம் என்றாலே, மக்கள் முகத்தைச் சுளிக்கின்ற அளவுக்கு காட்டம் ஏற்பட்டது. சீட்டிலே காட்டம் ஏற்பட்டது ஒருபுறமிருக்க, அதன் மேல் நோட்டம் விட்டவர்கள் கொடுத்த ஆதரவு இருக்கிறதே...அதுதான் நமக்கு ஆச்சரிய மாக இருக்கிறது. அதுவும் ராஜ போகமான வரவேற்பு ராணியின் மடியிலே ஜாம் ஜாம்' என்று அமர்ந்து, ராஜாங்க விருந்துகளில் இடம்பெற்று, அறிஞர், அதிகாரிகள் என்பவர்கள் கையிலே தவழ்ந்து... இப்படி ஒருநிலைமை சீட்டாட்டத் திற்கு இருந்தது என்றால் நம்புகின்றீர்களா? ஆமாம்! அகிலத்தையே ஒரு குடைக் கீழ் ஆண்டது இங்கிலாந்து நாடு என்பதை அறிவோம்