பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. ராணியின் மடியில் அதிகமான உடல் உழைப்பிற்குப் பிறகு, அல்லது ஓயாத வேலை செய்து களைத்தபிறகு உல்லாசமாகவும் உற்சாகமாகவும் இருக்க, ஆரம்ப நாட்களில் சீட்டாட்டம் பயன் பட்டு வந்தது. இத்தகைய ஏற்றமிகு நிலையானது. இதில் ஈடுபட் டிருந்தவர்களின் பாரம்பரியச் சிறப்பிலே பிறந்தது என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு இராணியின் ஆயுள்காலம் முழுவதும் அவளது அன்பான அரவணைப்பிலே, ஆலமரம் போல செழித்து வளர்ந்தது என்று கூறியிருந்தோம். ஆமாம்! அகிலத்தையே ஒரு குடைக்கீழ் ஆளும் பெருமை பெற்றிருந்த இங்கிலாந்தை ஆண்டவள் அவள். அவளது ஆட்சிக்காலம் 1559 முதல் 1603. அந்த நாற்பத்தி ஐந்தாண்டு ஆட்சிக் காலம் சீட்டாட்டத்தின் நற்காலமாக மட்டுமல்ல, பொற் காலமாகவும் அமைந்து விட்டிருந்தது.