பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

ராஜாக்களில் யார் படம் சீட்டுக்களில் போடுவது என்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கண்டாள் அந்த மேதையான ராணி. ஸ்பேட் ராஜா படத்தில் மகா அலெக்சாந்தர் படமும்; ஹார்ட் ராஜா படத்தில் சார்லிமேகன் படமும், டைமன்ட் ராஜா படத்தில் ஜூலியஸ் சீசரின் படமும், ஸ்பேட் ராஜா படத்தில் தாவிது ராஜா படமும் இருக்க வேண்டும் என்ற முடிவினைக் கொண்டு வந்து பிரச்சினைகளுக்கு முடிவு கட்டினாள் எலிசபெத் ராணி.

எலிசபெத் ராணி காலத்தில் எந்தப் பெயரில் இந்த சீட்டாட்டம் ஆடப்பெற்று வந்தது என்னும் குறிப்பு வரலாற்றுப்பக்கங்களில் காணப்படவில்லை. என்றாலும், எலிசபெத் ராணியும் அவரது நண்பர்களும் ஆதரவாளர்களும் முதன் முதலில் ஒரு வரன் முறையுடன் விதிமுறைகளை அமைத்துக் கொண்டு ஆடினார்கள் என்பதை மட்டும் வரலாறு புகழ்ந்து பேசுகிறது.

முதன் முதலாக சீட்டுக்களை வைத்துக் கொண்டு ஆட்டமாக ஆடிய பெருமை எலிசபெத் ராணிக்கே போய்ச் சேருகிறது. அவர்கள் ஆடிய ஆட்டத்தின் பெயர் ரஃப் அண்ட் ஹானர்ஸ் (Ruff and Honours) என்று அழைக்கப்பட்டது. இந்த ஆட்டம் தான் சீட்டாட்டங்களுக்கெல்லாம் தாய் ஆட்டம்; பாட்டி ஆட்டம் என்றும் கூறலாம்.

எலிசபெத் ராணியின் சீர்திருத்தத்திற்குப் பிறகு செம்மையடைந்த இந்த ஆட்டம், இப்படியே