பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

மக்களுக்கு பல ஆண்டுகளாக சேவை புரிந்து வந்தது. ஆர்வமுள்ள மக்கள் அதிகமாயினர். ஆட்டத்தில் அவர்கள் திருப்தியடைந்தார்கள். விதி முறைகள் வேண்டும் என்பதுபற்றி அவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. விளையாடி மகிழ்ந்தால் போதும் என்ற விருப்பத்துடன் இருந்தார்களே தவிர, விதிகள் வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி இல்லாமலே விளையாடினர்.

மக்கள் மதியற்றுக் கிடந்தால் என்ன? அவர்களுக்கு அறிவு வழங்கவும், ஆற்றல் உண்டாக்கவும் காலத்திற்குத் தெரியுமே! காலத்தின் கைகள் காரியம் ஆற்றத் தொடங்கின. அந்தக்காரியம் 1650ம் ஆண்டு நடைபெற்றது. ஆமாம், ஆட்டத்திற்கு புதிய பெயர் வந்து சேர்ந்தது. விதிகள் மாற்றம் பெற்றன. ஆட்டமும் ஏற்றம் பெற்றது

ரஃப் அண்ட் ஹானர்ஸ் என்ற பெயர் மாறி, ஸ்வேபர்ஸ் (Swabbers) எனும் புதிய பெயர் உண்டாயிற்று. ஆனால், இதிலே புதிய கிளைகளும், தோன்றின. ஆமாம். புதிய ஆட்டமுறையினை விரும்பிய மக்கள், தாங்கள் விரும்பும் விதங்களில் எல்லாம் விரும்பியவண்ணம் ஆடிக் கொண்டனர். இப்படியே பதினைந்து இருபது ஆண்டுகள் கழிந்தன.

லண்டன் மாநகரில் மனமகிழ்மன்றம் ஒன்று. அது கிரெனன் காபி ஹவுஸ் என்ற பெயருடன் விளங்கியது. அங்கு வருபவர்கள் வசதி படைத்த