பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


129 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சமுதாய அந்தஸ்தும் பெற்றவர்கள். அந்த நண்பர்கள் குழு ஒன்று. ஆட்டத்தில் மனம் லயித்துப்போய், ஆடி மகிழ்ந்து வரும் நாட்களில் ஒரு நாள் சிந்தனை செய்யத் தொடங்கியது. அந்த சிந்தனைக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் ஒருவர் சர் பட்டம் பெற்றவர். சர் ஜேக்கப் டி பூவரி என்பது அவர் பெயர். அவர் தான் ஒரு புதிய அணுகு முறையை மேற் கொண் டார். ரஃப் அண்ட் ஹானர்ஸ் எனும் ஆட்டத்தி லிருந்து சில நல்ல குறிப்புக்களைத் தேர்ந்தெடுத் தார். அதன்பின் தோன்றிய ஸ்வேபர்ஸ் எனும் ஆட்டத்திலிருந்து சில நல்ல ஆட்ட முறைகளைத் தேர்ந்தெடுத்தார். இரண்டையும் ஒன்று படுத்திப் பார்த்தார். ஒரு புதிய ஆட்ட முறை வந்து பிறந்தது. புதிய ஆட்டத்தினால் பல பயன்கள் விளைந்தன. தான் ஆடும்பொழுது ஆட்டத்தில் அனுபவித்த பல ஆட்டச்சிக்கல்களைத் தவித்தார். என்னென்ன இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந் தாரோ அத்தனை முறையையும் சேர்த்தார். சிக்கல் இல்லாத சிறப்பம்சங்கள் நிறைந்த புதிய சீட்டாட்டம் ஒன்று தோன்றியது. ஆனால் அதற்கு அவர் என்ன பெயர் இட்டார் என்பது பற்றி வரலாற்