பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

றில் இல்லை. இருந்தாலும் பெரியல்லாத அந்த ஆட்டம் பிரபலமடையத் தொடங்கியது.

இரண்டு ஆட்டங்களின் இணைப்பும், இடையிடையே சிக்கல் ஏழாத நேர்த்தியும் புதிய ஆட்டத்தில் இருந்ததால், பல புதிய திறன் நுட்பங்களும் திறன் நுணுக்கங்களும் இடம் பெற்றுக் கொண்டன. இதனால், எப்படி வேண்டுமென்றாலும் ஞாபகமில்லாமலே கூட கவனமற்று ஆடலாம் என்று இருந்த பழையநிலைமாறி, கண்ணுங்கருத்துமாக இருந்து ஆடினால்தான் ஆட்டத்தை ஆடமுடியும் என்ற சூழ்நிலை தோன்றியது. அதனால் ஆட்டத்தின் பெயர் காட்டுத்தீயாகப் பரவி, கேட்பாரையும் கவர்ந்திழுக்கத் தொடங்கியது.

மிகவும் நுணுக்கமாக, மிகவும் தந்திரமாக, மனம் ஒன்றிய நிலையில் சிந்தித்துத்தான் ஆடவேண்டிய நிலைமை இருந்ததால், சலசலவென்று சத்தமிட்டுப் பேசிக் கொண்டு ஆடிய ஆட்டக்காரர்கள், மெளன விரதம் பூண்டவர்கள் போல, வாயடைத்துக் கொண்டு ஆடினர்.

இவ்வாறு மெளனப்படுத்திய ஆட்டத்திற்குப் பின்னாளில் வந்த பெயர் விஸ்ட் (Whist) என்பதாகும். விஸ்டு என்ற சொல்லுக்கு மெளனமாயிரு அல்லது அமைதியாக இரு என்பது அர்த்தமாம், ஆட்டக்காரர்களிடையே அமைதி நிலவியதால், அவர்கள் அப்படி அமைக்கத் தொடங்கியதே