பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 3 1 நாளடைவில் விஸ்டு என்ற பெயருடன் விளங்குவ தாயிற்று. விஸ்டு ஆட்டம் மக்களிடையே வேகமாகப் பரவியது. அன்பர்கள் ரசிகர்கள் பெருகினார்கள். ஆர்வம் ததும்பவே, அதில் அக்கறை மிகுதியாக எழ ஆரம்பித்தது. சிந்தனைகள் சிலிர்த்துக் கொண்டன. ஆட்டத்தில் நுணுக்கங்கள் துழைந்து கொண்டன. மாற்றங்கள் வருவதை மனங்கள் விரும்பின. புதுமை விரும்பிகள் புது ஆட்டத்தை விரும்பினர். இப்படியாக, விஸ்டு என்ற ஆட்டம் கிளை விட்டுக் கொண்டது. ஆமாம் பிரிட்ஜ்விஸ்ட், ஆக்ஷன் பிரிட்ஜ் என்று மாறின, மேலும், கான்ட் ராக்ட் பிரிட்ஜ் என்றும் பிரிந்து வந்தது. ஆட்டத்தில் பிரிவுகள் தோன்றினவே தவிர, ஆடும் விதிகள் சரிவர ஏற்படாமல், குழப்பங்கள் தோன்ற ஆரம் பித்தன.