பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. விழிப்புணர்ச்சியும் வளர்ச்சியும்


ஒன்றன் பின் ஒன்றாக விஸ்டு எனும் ஆட்டத்திலிருந்து பல மாதிரியான ஆட்டங்கள் தோன்றிக் கொண்டேவந்தன. அவை பிறந்த இடத்திலே பிறப்பெடுத்த நிலைமையிலே நின்று போகாமல், பாரெங்கும் பரவிக் கொண்டு பவனி வரும் வழி முறைகளைச் செய்து கொண்டு வளர்ந்தன. உற்சாகத்துடன் ஆடக்கூடிய அன்பர்களை ஒரு மித்த அளவிலும் பெற்றுக் கொண்டன.

ஆட்டத்தை மதித்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு ஆடிய அன்பர்களில் பலர் அறிவாளிகளாகவும் இருந்தனர். மேலும் சிலர் ஆராய்ச்சி அறிவிலும் அனுபவமிக்கவர்களாக விளங்கினர். அதனால், அவர்களின் அறிவும் ஆராய்ச்சியும் ஆட்ட வளர்ச்சியை மிகுதிப்படுத்தி விரைவான வளர்ச்சி படுத்தவும் கூடிய நோக்கத்திலேயே நிறைந்துகிடந்தன. அதன் பயனாக, 25 வகைகளுக்கு மேல் விஸ்டு ஆட்டம் கிளைவிட்டுக்கிடந்த நிலையை குழப்பமின்றி ஆடக்கூடிய தெளிவான முறைகளைத்தர வேண்டும் என்றும் முயன்றனர்.