பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆட்டங்கள் உருவானால் மட்டும் போதுமா? ஆடுகின்ற ஆட்டக்காரர்களும் ரசிகர்களும் நிறைந்து வந்தால் மட்டும் போதுமா? வாய் மொழி யாகவே விதிகளும் முறைகளும் இருந்தால் வளர்ச்சி வருமா என்ன? ஆகவே ஏட்டில் இடம் பெறச் செய்கின்ற முறைகளும் முதன்மையான இடம் பெறத் தொடங்கின. சீட்டாட்ட விளையாட்டைப் பற்றி, ஆட்டத் தின் ஆரம்ப நாட்களில் காட்டன் (Cotton) என்பவ ரால் எழுதப் பெற்ற நூல் ஒன்று தான் இருந்து வந்தது. அதன் பெயர் கம்பிளிட் கேம்ஸ்டர் (Complete Gamester) 6T65TL15TG5th. இது 1674ம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இதில் ஆச்சரிய மான செய்தி என்னவென்றால், மூளைத்திறனுடன் அதிர்ஷ்டத்தை நம்பி ஆடுகின்ற ஆட்டங்களாக உள்ள சதுரங்கம், செக்கர்ஸ், டாபினோல் எனும் ஆட்டங்களைப் பற்றி விரிவாக எழுதிய இந்த ஆசிரியர் ராணி எலிசபெத் விரும்பி ஆடி வளர்ச்சி பெறச் செய்த ரஃப் அன் ஹானர்ஸ் என்பதைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை. 1679 ஆண்டு ரிச்சர்ட் சீமர் (Richard Seymour) என்பவர் தி கோர்ட் கேம்ஸ்டர் (The Court Gamester) எனும் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் ரஃப் அன் ஹானர்ஸ் ஆட்டம் மற்றும் ஸ்வேபர்ஸ் எனும் ஆட்டம் இரண்டிலிருந்து உருவாகித் தோன்றிய விஸ்டு ஆட்டம் பற்றி அபிப்ராயம் தெரிவிக்கப்பட் டிருந்தது. அத்துடன், அதுபற்றிய ஆராய்ச்சிக்