பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f 35 மிரட்டலுக்கு ஏற்பவும் வளைந்து நெளிந்து கொடுக் துக் கொண்டிருந்தன விதிகள் என்று உணர்ந்தார். ஆட்ட நேரங்களில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படுவதற்குப்பதிலாக, அடிக்கடி குழப்பங்களும் கலவரங்களும் நேர்வதையும் கண்டார். விறுவிறுப் பான உச்சக்கட்ட நேரங்களில், வெற்றி தோல்வி நிர்ணயிக்க வேண்டிய சமயங்களில், சிக்கல் நேர் கின்ற தருணங்களில், சீர்மையுடனும் நேர்மை யுடனும் தீர்த்து வைக்க வேண்டிய விதிமுறைகள் இல்லாத வெறுமை நிலைகளைக் கண்டார் ஹொய்லே... விதிமுறைகள் பற்றிய விவாதங்கள் சங்கடங் of 506YT ஏற்படுத்தித் தருகின்ற சர்ச்சைகள் அடிக்கடித் தோன்றிய நிலைமைகளை சமாளிக்க வேண்டுமென்றால், ஒரு புதுநூல் எழுதித்தான் தீர வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு உட்படுத்தப் பட்டார். அவர் எழுத முயற்சி செய்ததற்கும் இன்னும் ஒரு காரணம் இருந்தது. தனது நண்பர்கள், தன்னிடம் கற்றுக் கொள்கின்ற சிஷ்யர்கள், சிஷ்யர் களைப் பின்பற்றி ஆடும் அவரது நண்பர்கள், அன்பர்கள் இவர்களின் திருப்திக்காகவும் இப்படி ஒரு காரியம் செய்தாக வேண்டும் என்ற பணியை சிரமேற்கொண்டுதொடர்ந் தார். அவரின் அனுபவங்களும், ஆர்வ எழுச்சியால் அவ்வப்போது தோன்றிய நுண்கருத்துக்களும்