பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

உண்டாக்கிய செயற்கை விதிகள் எத்தனை நாள் தாங்கும்?

1742ல் தோன்றிய இந்த சீட்டாட்ட விதி முறைகள் ஏறத்தாழ 122 ஆண்டுகள் தான் தாக்குப் பிடித்தன. அதற்கிடையில் தான் ஆயிரமாயிரம் கருத்துத் தூண்டுதல்கள்! சீட்டாட்டம் ஒரு சிந்தனை ஆட்டமல்லவா! இதன் செழிப்பில் சிக்கிக் கொண்ட ரசிகப் பெருமக்கள் சிந்திக்கத் தொடங்கியதில் ஆச்சரியமில்லையே!

இப்படிப்பட்ட ஒரு சிந்தனை இயக்கம் 1950ம் ஆண்டு இங்கிலாந்திலே தோன்றியது. சீட்டாட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் ஒன்று கூடினர். ஹோய்லே விதிகள் வளர்ந்து வரும் ஆட்டத்தின் வேகத்திற்கும் வளர்ச்சிக்கும் ஈடு கொடுக்கும் அளவுக்குப் புதியனவாக இல்லை என்று கலந்துரையாடி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது புதிய விதி முறைகள் வேண்டும் என்று விரும்பினர்.

தனி ஒருவர் செய்த சாதனையான ஹோய்லே விதிமுறைகளுக்கு செழுமை தருவதாக மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இங்கிலாந்தில் உள்ள போர்ட்லேண்ட், மற்றும் ஆர்லிங்டன் என்னும் இடங்களில் இருந்த விஸ்ட் சீட்டாட்ட சங்கங்களைச் சேர்ந்த ஆட்டக் காரர்களில் சிலர் சேர்ந்து, ஒரு துணைக் குழுவை உருவாக்கினர்.