பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

அந்தத் துணைக் குழு ஒரு அபூர்வமான பணியை மேற்கொண்டது விஸ்டு ஆட்டங்களுக்காக விதிமுறைகளைத் திருத்தி எழுதியதுடன், ஹோய்லே எழுதிய அடிப்படை விதிமுறைகளையும் கொஞ்சம் மாற்றி எழுதி புதியவடிவம் கொடுத்தது. இவ்வாறு சீட்டாட்ட வளர்ச்சிக்குப் புதிய உற்சாகம் கொடுத்தனர் இங்கிலாந்து சீட்டாட்டக்காரர்கள்.

இந்தியா தனது பங்கையும் சீட்டாட்டத்திற்குத் தந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! விஸ்டு, கான்டிராக்ட் பிரிட்ஜ் என்ற ஆட்டம் போல, ஆக்ஷன் பிரிட்ஜ் என்ற ஒரு ஆட்டமும் அந்நாளில் பிரபலமாக இருந்து வந்தது. அந்த ஆக்ஷன் பிரிட்ஜ் ஆட்டம் இந்தியாவில் தான் கண்டு பிடிக்கப்பட்டு, இங்கிலாந்து நாட்டிற்குப் போனது என்பது தான் நமக்குப் பிரமிப்பு தரும் வியப்பையும், புகழையும் கொடுத்திருக்கிறது. ஆமாம்! இந்தியா ஒரு பெரிய துணைக் கண்டமல்லவா!

சீட்டாட்டம் என்றால் நான்கு பேர் இருந்து ஆடுவது தான் முறை. ஆனால், இந்த ஆக்ஜன் பிரிட்ஜ் என்ற ஆட்டம், மூன்று பேர்கள் இருந்து ஆடக் கூடியதாகும். 1937ம் ஆண்டுக்கு முன்பாக (ஆண்டு சரியாகக் குறிப்பிடப்படவில்லை) ஒரு நாள், மூன்று ஆங்கிலேய சேனைத் தலைவர்கள் கூடி சீட்டாட்டம் ஆட விரும்பிய போது