பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

நான்காவது ஆள் கிடைக்கவில்லை, என்பதற்காக மூன்று பேராக ஒரு சில விதி முறைகளை அமைத்துக் கொண்டு ஆடினர். அதுவே ஒரு புதிய ஆட்டமாகப் பிறப்பெடுத்துக் கொண்டது.

52 சீட்டுகள் உள்ளவைதான் ஒரு கட்டு என்பதும் அதை வைத்து ஆடுவது தான் ஆட்டம் என்பதும் பழைய முறை சீட்டாட்டம் புதிய வடிவம் பெற்ற போது, 52க்குப் பதிலாக, 65 சீட்டுகள் இடம் பெற்றுக் கொண்டன.

1937ம் ஆண்டுக்குப் பிறகு 65 உள்ள சீட்டுக் கட்டுகள் பிரபலமாகின. அதற்கு நாட்டுக்கு நாடு வெவ்வேறு பெயர்கள் வந்து உதித்தன. ஐரோப்பிய நாடுகளில் இதற்கு ராயல்ஸ் என்பது பெயர். ஆஸ்திரேலியாவில் கிரீன்ஸ் அமெரிக்காவில் ஈகின்ஸ் என்பதும் புதிய பெயர்கள்.

இந்த 65 சீட்டுகள் உள்ள ஆட்டத்தைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் வியன்னா நாட்டைச் சேர்ந்த டாக்டர் வால்தர் மார்ஷெலி என்பவர் கண்டுபிடித்த ஆண்டு ஏறத்தாழ 1927ம் ஆண்டு என்பார்கள். இந்த ஆட்டம் ஒரு மறந்து போன ஆட்டமாக இருந்து வந்தது. மீண்டும் மறுபிறவி எடுத்துக் கொண்டது போல மக்களிடையே பிரபலமாக ஆகி விட்டது

ஆக்ஷன் பிரிட்ஜ் ஆட்டம் மூன்று பேர்கள் அடங்கிய ஆட்டம் நான்காவது ஆளுக்குள்ள