பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 பாகிஸ்தானில் பிறக்கப்பட்டிருந்ததை நீங்களெல் லாம் அறிவீர்கள். ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, கிரேக்க நாட்டு ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்ப்பதற். காக ஒரு பெண்மணி பந்தய அரங்கிற்குள் சென்று விட்டாள். ஆண்வேடத்திலே தலைப் பாகை அணிந்து சென்று ஆனந்தமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி. தன்னை மறந்து சந்தோஷக் கூச்சலிட்டுத் துள்ளினாள். விளைவு-தலைப்பாகை கீழே விழுந்து விட்டது. முடிவு : பெண் ஒருத்தி பந்தயம் பார்க்க வந்து விட்டாள் என்ற சேதி எல்லோரிடையிலும் பரவ, ஆட்ட அதிகாரிகள் ஓடிவந்து அவளைக் கைது செய்ய, கைதியானாள். குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டாள். குற்றம் சாட்டப்பட்டாள், பிறகென்ன? மரண தண்டனைதான். ஆனால் அவள் என்ன சொன்னாள்? எவ்வாறு தப்பித்துக் கொண்டாள்? பெண்களுக்கு சுதந்திரம் எப்படி வந்தது? ஆண்களே நிறைந்திருக்கும் அரங்கிற்குள் நிர்வாணமாகப் பங்கு பெறும் இளைஞர்களுக் கிடையே, பார்வையாளராக ஒரு பெண் வந்து விட்டாள் என்றால் பொறுப்பார்களா? விளையாட்டுத் திடலை மறைத்திருக்கும் மறைப்பினை விலக்கி மறைந்திருந்து பார்ப்பது,