பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15 ஒலிம்பிக்போட்டிகள் என்பது மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் என்றாலும், அந்த புனிதமான நிகழ்ச்சி களில் பெண்கள் பார்க்கவோ அல்லது கலந்து கொள்ளவோ தவிர்க்கப்பட்டிருந்தனர். அது அந்த நாட்டுச் சட்டம். பெரினிஸ் என்ற அந்தத் தாயின் வாக்கு மூலத் தைக்கேட்ட அதிகாரிகள் அனைவரும், இந்த நாட்டுப் பெண்களுக்கும் இப்படி ஓர் ஏக்கம் இருக் கிறதா, ஊக்கம் இருக்கிறதா என்று எண்ணத் தலைப்பட்டனர். முடிவு.பெரினிஸ் விடுதலை யடைந்தாள். பிரபலமான பந்தயங்களில் இருந்த கடுமையான சட்டம் கொஞ்சம் பின்வாங்கிக் கொண்டது. ஆமாம்! பெண்கள் பந்தயங்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிதான் பெண்கள் பந்தயங்களைப் பார்க்கவும். பிற்காலத்தில் பெருவாரியாகப் பங்கு பெறவும் கூடிய வாய்ப்பினை வழங்கிய ஒப்பற்ற முன்னோடி வரலாறு ஆகும் ஆனால், ஆண்கள் பந்தயங்களைப் பார்க்கத் தான் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தார்களே தவிர, பெண்களே விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறவும் பயன் கொள்ளவும் கூடிய வாய்ப்புகளை யும் வசதிகளையும் அப்பொழுதே அவர்கள் பெற் றிருந்தார்கள். தடுக்கப்பட்ட தாய்க்குலம் தங்களுக்குள்ளே நடத்திக் கொண்ட போட்டிகள், நான்கு ஆண்டு