பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18



கி. பி. 16ம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்து நாட்டின் ராணியாக விளங்கிய மேரி என்பவள், கோல்ப் ஆட்டத்தில் மிகவும் ஆர்வத்துடன் பங்குபெற்று, அந்த ஆட்டம் வளர்ச்சி பெற அநேக உதவிகளைச் செய்திருக்கிறாள்.

கி. பி. 1558 முதல் 1608 வரை ஆண்ட ராணி எலிசபத் சீட்டாட்டத்தில் சிறந்த ராணியாகவே விளங்கினாள். அத்துடன் வேட்டையாடுவதிலும், நாய்ப் பந்தயங்களை நடத்துவதிலும் அதிக ஈடுபாடு காட்டி, அத்தகைய விளையாட்டுக்களை வளர்த்தாள்.

கி. பி. 1702 முதல் 1714 வரை இங்கிலாந்து ராணியாக விளங்கிய ஆன் என்பவள். குதிரைப் பந்தய விளையாட்டை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தாள். அதற்கான விதிமுறைகளை வகுத்ததுடன், சீரும் சிறப்புமாக நடத்த தன் அரசாங்க அதிகாரம் முழுவதையும் அளித்து வளர்த்து, பெருமை பெற்றாள்.

ஆன் அரசிக்குப் பிறகு, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பெண்கள் விளையாட்டுப் பந்தயங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையும், பெண்மைக்கும் தசை வளர்ச்சிக்கும் ஒத்துவராது என்று குழப்பக்கருத்தும் இங்கிலாந்தில் மட்டுமின்றி, அநேகப் புரட்சிகளுக்கு முன்னோடி