பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. எங்கெல்லாம் விளையாட்டோ அங்கெல்லாம்!


விளையாடுகின்ற திடல் பக்கமே பெண்கள் வரக் கூடாது, என்பதில் கூட கண்ணும் கருத்துமாக இருந்து காவல் காத்துக் கிடந்த ஆண்கள் பலர் உண்டு. ஆனால் 1909ம் ஆண்டில், அமெரிக்க நாட்டில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி நடந்தது.

25. வயது நிறைந்த எழில் நங்கை ஒருத்தி, ஆண்கள் அணிந்து கொள்ளும் குதிரைப் பந்தாட்ட போட்டிக்கான உடைகளை அதாவது முழுக்கால் சட்டை, ஜெர்சியை அணிந்துகொண்டு வந்து ஆடத் தயாராக இருந்த ஆண்களிடையே சென்று, தானும் ஆடுவதற்கு ஒரு வாய்ப்புத் தருமாறு கேட்டாள்.

‘தமாஷ்' என்று நகைத்தனர் பலர். வாயடைத் துப்போய் நின்றனர் சிலர். பெண் ஒருத்திக்கு இத்தனைத் துணிவா? ஆண்களுக்கு சமமாகக்