பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 1 குதிரை ஏறி பந்தாட வருகிறேன் என்கிறாளே! என்ன ஆணவம் என்று எரிச்சலுடன் பார்த்தனர். பர்லிங்காம் கன்ரி கிளப் என்ற விளையாட்டு மைதானத்தில் இடம் கேட்டு ஏளனத்துக்கு ஆளான அந்த நங்கை, அதற்காகக் கவலைப்பட வில்லை. பின் வாங்கிப் போய் விடவும் இல்லை. எங்கெங்கே விளையாட்டுப் போட்டிகள் நடந் தாலும், அங்கே போவாள். ஆண்கள் விளையாட் டுக்காக அணிகின்ற ஆடைகளுடன் தான். முடியாது, இங்கிருந்து போ என்ற பதில்கள் தான் பெற்றாளே தவிர, வரவேற்பு ஒரு சிறிதும் பெற்றாளில்லை. ஆண்கள் மேல் அவளுக்கு வெறுப்புதான் ஏற்பட்டது. பிறகு? அதிவேகமாக ஆண்கள் ஒட்டும் வாகனங் களை ஒட்ட ஆரம்பித்தாள். அதிலே ஆண் களையும் மிஞ்சுகின்ற அளவுக்கு வேகமாக வாகனங்களை ஒட்டினாள். புதிய சாதனைகளைப் படைத்தாள். ஆண்கள் எதிர்த்து ஒட்டிப் போட்டிக்கு வர வெட்கப்படும் வண்ணம் அவள் வேக மங்கையாக விளங்கினாள். அவளுக்குக் கிடைத்த பெயர் வேகப் பேய் என்பதாகும். வாகனங்களில் மட்டும் அல்ல. வேகமாக ஒட்டும் மோட்டார் படகுப் போட்டியிலும் முன்னணியில் நின்றாள். கோல்ப் ஆட்டத்தில் கலந்து கொண்டாள். ஆண்களைத் தோற்கடித்