பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


தாள். எந்த ஆட்டத்திலும் பயிற்சி இல்லாத அந்த மங்கைக்கு ஒரு இயற்கையான ஆற்றல் இருந்தது.

ஆண்கள் ஆடுகின்ற ஒரு ஆட்டத்தை ஓரிரு நாள் பார்த்தால் போதும். சிறிது பயிற்சி. பிறகு... அவர்களுக்கு இணையாக ஆடிக் காட்டுவாள். 50 வயது ஆனபிறகு கூட Squash என்ற ஆட்டத்தில் வெற்றி வீராங்கனையாகத் திகழ்ந்தாள். 55 வயதில் கூட ஆற்றல் குறையாத மங்கையாக வாழ்ந்த அவளது பெயர் Miss Sears ஆகும்.

அவளுக்குப் பிறகு எலியனோரா சியர்ஸ் என்ற பெண்மணி டென்னிஸ் உலகத்தையே ஆட்டி வைத்தாள்.

இதற்கும் மேலாக ஆஸ்திரேலியப் பெண் ஒருத்தி. எப்பொழுதும் நோய்க்கு ஆளாகி நொந்து கிடந்த அந்தப் பெண்ணை நீச்சல் கற்றுக் கொள்ள அறிவுரை தந்தார்களாம், அவளும் நீச்சலில் முழு மூச்சாகப் பயிற்சி செய்யத் தொடங்கினாள். விளைவு! நோஞ்சானாகக் கிடந்த அவளது தேகம் நேர்த்தி பெறத் தொடங்கியது. அங்கங்கள் அழகு மையங்களாகின. சிறந்த பேரழகியாகவும் மாறி விட்டாள். அத்துடன் நீச்சல் கலையிலும் வீராங்கனையாகத் திகழ்ந்தாள்.

போட்டிருக்கின்ற உடை, நீச்சலுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று, ஆடைகளைக் களைந்து விட் டு, இன்று இருக்கின்ற நீச்சல் உடைபோல