பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 1912ம் ஆண்டு, ஸ்டாக்ஹோம் என்ற இடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில், நீச்சல் போட்டியில் மட்டும் கலந்து கொள்ள பெண் கள் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆஸ்திரேலிய வீராங்கனை செல்வி ஃபேனி டுரக் என்பவர் ஆண் களே வியந்து பாராட்டும் வண்ணம் நீந்தி, தங்கப் பதக்கம் பெற்று, வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டாள். ஒலிம்பிக் பந்தயங்களில் பெண்கள் இடம் தேடிக் கொண்டார்களே தவிர, அது வளரவும் இல்லை. மிகுதி பெறவும் இல்லை. அவர்கள் 1928ம் ஆண்டு வரை காத்துக் கிடக்க நேரிட்டது. போராட வேண்டியிருந்தது. ஆமாம்! 1928ம் ஆண்டுதான் 5 போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பினைப் பெற்றார்கள். இப்படியாக படிப்படியாக பெண்கள் விளையாட்டுக்களில் பங்கு பெற்றார்கள். பெருமை பெற்றார்கள். ஆனால் இன்றைய நிலைமை என்ன? இன்று பெண்கள் பங்கு கொள்ளாத விளை யாட்டுக்களே இல்லை எனலாம். கடினமான கால் பந்தா டத்திலிருந்து நாள் முழுதும் ஆடுகின்ற கிரிக்கெட் வரை, குத்துச் சண்டை முதல் மலை யேறும் போட்டி வரை, பெண்கள் இல்லாத இடமே இல்லை என்றே கூறலாம். பெண்கள் பங்கு பெறாத விளையாட்டுகளுக்குப் பெருமையே