பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25 இல்லை என்று பொது மக்களும், பார்வையாளர் களும் பேசிக் கொள்கின்ற அளவுக்கு பெண்கள் விளையாட்டுக்களில் பங்கு கொண்டு வெற்றி பெறு கின்றனர். ஆனால், பெண்கள் ஏன் விளையாடக்கூடாது என்ற கேள்வி எழுகிறது? ஆணுக்கும் பெண்ணுக் கும் உள்ள அடிப்படை வித்தியாசம் தான் அதற்குக் காரணமா? அங்க அமைப்புக்களின் விசேஷமா? சமுதாயக் கட்டுப்பாட்டின் வெளிப்பாடா? பிறகு அது என்னவாக இருக்கும்? ஆண்களைப்போல் பெண்கள் உடல்நிலை அமைப்பு இல்லை என்றால், அவை எப்படி இருக்கும்? இந்தக் கருத்தினை காண்போம்.