பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27 ஆண் பெண்பால் (sex) வேறுபாடு என்பது உண்டு. அதாவது ஆண்களுக்கு 15 குரோ மோசோம் என்றும், பெண்களுக்கு 20 குரோ மோசோம் என்றும் கூறுவார்கள். e ஆண்களுக்கு உள்ளே உள்ள ஹார்மோன் ஒன்று. அதன் பெயர் டெஸ்டோஸ்டெரோன் (lestosterone) என்பது, அதற்குரிய ஆற்றலால்தான், ஆண்களுக்குரிய பெருத்த எலும்பு வளர்ச்சியும் திரண்ட தசையமைப்பும் ஏற்படுகிறது. அதாவது வலிய எலும்புகள் வலிமை மிகுந்த தசைத்திறன்கள் மற்றும் ஆண்மை குணாதிசயங்கள் அனைத்தும் ஏற்படுகின்றன. பெண்கள், உடலில் சுரக்கும் ஹார்மோன் ஒன்று, அதன் பெயர் ஒஸ்ட்ரோஜஸ் (Oestroges) என்பது. பெண்மைக்குரிய அத்தனை குணங்களை வளர்ப்பதுடன், வழவழப்பான தேகம்-கொழுப்புச் சக்தி-குறைந்த அளவு சதைப்பகுதி-மென்மை யான எலும்புகள்- சிறிய ஆனால் அதற்கேற்ற வலிமையும் சக்தியும் உண்டய உடல் என்பதாக பெண் உடல் அமைகிறது. சிறுவர் சிறுமியர்க்கு ஏறத்தாழ 10 வயதாகும் வரை மேற்கூறிய இரண்டு ஹார்மோன்களும் நன்கு வளர்ந்து செயல்படாமல் இருப்பதால்தான், பத்து வயது வரை உள்ள சிறார்கள் சேர்ந்து, ஒரே வேகம் வலிமை இவற்றுடன் செயல்படுவதையும், விளை