பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 யாடுவதையும் நாம் காண்கிறோம். ஹார்மோன்கள் வளர்ச்சியடைகிறபொழுதுதான் ஆண் பெண் வித்தியாசமே பெரிதுபடத் தொடங்குகிறது. பெண்களின் தேக வளர்ச்சி 10 - 12 வயதில் தொடங்கி 16ம் வயதில் தேர்ச்சி பெற்றுக் கொள் கிறது. ஆண்களின் தேக வளர்ச்சியோ 12 - 14 வயதில் தொடங்கி 20ம் வயதில் எழுச்சி பெற்றுக் கொள்கிறது. எலும்பும் அமைப்பும் ஆண்களுக்குரிய எலும்பின் அமைப்பானது நீண்டும், திரண்ட தன்மை உடையதாகவும், வலிய தாகவும் அமைந்திருக்கிறது. பெண்களுக்குரிய எலும்பானது, குட்டையாக வம், அதிகத் திரட்சி இல்லாத மென்மையுடைய தாகவும் உள்ளது. ஆண்களின் தோள் பட்டை எலும்பின் விரி வான அமைப்பு போல பெண்களுக்கு இல்லை. பெண்களின் இடுப்புக்குக் கீழே அமைந்தபகுதி (Pelvis) சற்று அகலமாகவும் விரிந்துள்ளது போல, ஆண்களுக்கு இல்லை.