பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


83 கால்களும் நீண்டதாக அமையாமல் சற்று குட்டை யானதாகவே இருக்கின்றன. அதனால், தாண்டுவது என்பது பெண்களுக்குச் சாதகமானதாக அமையாது என்று கூறுகின்றார்கள். பெண்கள் தாண்டிக் குதிப்பதும் அறிவுடைமை யாகாது என்பார்கள். பெண்கள் தாண்டிக் குதிக்கும் பொழுது உடலின் உட்புற மென்மையான பகுதிகள் சீர்கெட்டுப் போகின்றன, பழுதுபட்டுப் போகின்றன. அத்துடன், குதித்து மணலில் நிற்கிறபொழுது. உடலின், எடையையும் ஓடிவரும் வேகத்தையும் தாங்க இயலாமல் இடுப்பெலும்பு பகுதிகள் இன்னல் பட்டுப் போகின்றன என்கிற பழமைக்கருத்துக்களும் பயப்படுத்துகின்றன. - என்றாலும், தாண்டுவது இடுப்பெலும்பு பலம டைய உதவுகின்றன. அத்துடன் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் தேவையான சக்தியையும் அளிக் கின்றன என்றும் இந்நாள் வல்லுநர்கள் கருத்துக் களைத் தெரிவிக்கின்றார்கள். அதனால் தான், பெண்கள் போட்டியிட உயரத்தாண்டும் போட்டியும் நீளத் தாண்டும் போட்டியும் என்று அனுமதித்திருக்கின்றார்கள். மும்முறைத் தாண்டும் போட்டியானது தரையிலே இரண்டு முறை தாவிட வேண்டும் என்பதால் தான் தவிர்த்திருக்கின்றார்கள். கோலூன்றிக் தாண்டும் போட்டியும் பெண்களுக்கு இல்லை.