பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 நாடித்துடிப்பு துரிதமடைந்து விரைவு பெற்றுக் கொள்கிறது. ஆனால் இயல்பான நிலைக்கு வர அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. அதாவது ஆண்களின் நாடித்துடிப்பு விரைவில் சமநிலையை அடைவது போல பெண்களுக்கு அடைவதில்லை. நல்ல பயிற்சி செய்கின்ற பெண்ணின் நாடித் துடிப்பானது ஒரு சாதாரண மனிதனின் நாடித் துடிப்பை விட 1 நிமிடத்திற்கு 10 துடிப்பு மெது வாகத் தான் உள்ளது. பெண்கள் பயிற்சி செய்யும் போது உட்கொள்ளுகிற பிராணவாயுவின் அளவு ஆண்கள் உட்கொள்கிற அளவுக்கும் மிகவும் குறை வாகவே உள்ளது. அத்துடன், இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் ஆண்களின் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைவிட குறை வாகவே உள்ளது. அத்துடன் ஹீமோகுளோபின் அளவும் பெண்களுக்குக் குறைவுதான். சுவாசம் சுவாசக் குழாய் அமைப்பும் ஆண்களின் அளவைவிட சற்று சிறிய அளவில் தான் அமைந் திருக்கிறது. உடல் அமைப்பும் சிறியதாக இருப் பதால், உட்சுவாசமும் வெளிவிடும் தன்மையும் இயற்கையாகவே குறைந்த அளவே உள்ளது. அதனால் பெண்கள் உட்கொள்ளும் உயிர்க் காற்றின் அளவும் அதிகமாக இல்லை. ஆண்கள் ட்கொள்ளும் உயிர்க்காற்றின் அளவு 35%