பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள்


1928ம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தபோது, பெண்களுக்கான ஒட்டப் போட்டிகளில் 5 நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவைகள் 100 மீட்டர் ஒட்டம், 800 மீட்டர் ஒட்டம், 4 X 100 மீட்டர் தொடரோட்டம், உயரத்தாண்டல், மற்றும் தட்டெறிதல் முதலியன. உலகெங்கிலும் இருந்து 121 வீராங்கனைகள் வந்து இப்போட்டிகளில் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.

இவற்றில் ஒன்றான 800 மீட்டர் ஒட்டப் போட்டி நடக்கும் பொழுதுதான், பெண்களுக்கு எதிராகப்பேசும் ஆண்களுக்கு உற்சாகம் ஊட்டுவது போன்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 15 பெண்கள் ஒட்டப் போட்டியின் தொடக்கத்தில் இருந்து ஒடத் தொடங்கினர். ஆனால் 800 மீட்டர் துரத்தை ஒடி முடித்த பெண்களோ 7 பேர்கள் தான். எட்டுப் பெண்கள், துாரத்தை எட்டிப் பிடிக்காமலே இடையிலே நின்று விட்டனர். வந்து