பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/50

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 1958ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கு பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. |ந்திய நாட்டிலிருந்து செல்வி, மேரி லீலா ராவ் என்னும் வீராங்கனை, 80 மீட்டர் தடை தாண்டி ஒடும் போட்டியில் பங்கு பெற்று, இந்தியப் பெண் களின் கெளரவத்தைக் காத்தாள். 1960ம் ஆண்டு, ரோம் நகரில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றபோது வில்மாருடாலப் என்ற வீராங்கனையின் வெற்றி, உலகெங்கும் பர பரப்பை ஏற்படுத்தி விட்டது. அமெரிக்க நாட்டில், ஒரு ஏழை நீக்ரோ, பெற்றோர்களின் 17வது குழந்தையாகப் பிறந்த அந்தப் பெண், 11 வயது வரையிலும் இளம்பிள்ளை வாதத்தால் நடக்க முடியாது கிடந்து, பிறகு பயிற்சிகள் செய்து, உடற். குறையை வென்று, உலகம் போற்றும் ஒட்ட வீராங் கனையாக வெளி வந்தாள். மூன்று தங்கப்பதக்கங். களை வென்றாள். ஒலிம்பிக் பந்தயங்களின் மூடி சூடா ராணி என்னும் மாபெரும் புகழினையும் பெற்றாள். o இந்த வெற்றி நிகழ்ச்சியானது, 'விளை யாட்டுப் போட்டிகள் பெண்களின் பெண்மையை அழிக்காது, பெண் மென்மையைப் போக்காது; விளையாட்டுப் போட்டிகள் வளமார்ந்த பெண் களைத்தான் உருவாக்கும்.’’ என்ற உண்மையை, உலகுக்கு உணர்த்தியது. இந்த உண்மை வெளிப்.